CART

Marikolunthu Karpagam Alagammal Matrum Sila Madurai Pengal | மரிக்கொழுந்து கற்பகம் அழகம்மாள் மற்றும் சில மதுரைப் பெண்கள் சிறுகதைத் தொகுப்பு | தீபா நாகராணி

150.00
In stock : 10000 available

தீபா நாகராணியின் இக்கதைத் தொகுப்பில் 13 கதைகள் உள்ளன. வேறு வேறு வயதுப் பெண்களின் வாழ்வியல் பிரச்னைகளைக் கையாளும் கதைகளாக இவை வந்திருக்கின்றன. முதல் தொகுப்பு இது என்று சொல்ல முடியாதபடிக்குச் சரளமாகக் கதையை நகர்த்திச்செல்லும் லாவகம் இவருக்கு வாய்த்திருக்கிறது.

பெண்களின் வாழ்வியலிலிருந்தே எல்லாக் கதைகளும் எழுந்துள்ளது பாராட்டுக்குரியது. மிக லகுவாகக் கதை சொல்ல வருகிறது இவருக்கு. வாசகருக்கு நெருக்கமாக நின்று நேரடியான மொழியில் நேர்கோட்டில் கதை சொல்கிறார்.
- ச.தமிழ்ச்செல்வன்


ஜெ. தீபா நாகராணி (18.12.1977)  
மதுரையைச் சேர்ந்தவர். மதுரை மீனாட்சி அரசினர் மகளிர் கல்லூரியில் படிக்கும்போது  நாட்டு நலப்பணித் திட்டத்தில் (NSS) சிறந்த மாணவத் தொண்டருக்கான விருதை மாநில அளவில் பெற்றவர் (1998). அதே காலகட்டத்திலேயே சன், விஜய் உள்ளிட்ட தொலைக்காட்சிகளில் விவாத அரங்குகளில் பங்கேற்றவர். இவர் M.A. M.Phil., (வரலாறு)  பட்டம் பெற்றிருக்கிறார். குங்குமம் தோழி இதழில் ஓராண்டுக் காலம் (2014-15) ‘ஊஞ்சல்’ என்ற தலைப்பில் எழுதிய தொடர் நல்ல வரவேற்பை பெற்றது. பாவையர் மலர் இதழில் ‘பயணம்’ என்ற தலைப்பில் ஒரு வருடம் எழுதிய தொடர், சுற்றுலாவின் முக்கியத்துவத்தைப் பேசியது. ஜன்னல், கல்கி, ஃபெமினா, அந்திமழை, அவள் விகடன், செம்மலர், ஆனந்த விகடன்  உள்ளிட்ட இதழ்களில் இது வரை  இருபது  சிறுகதைகள் வெளிவந்துள்ளன. இலக்கியக் கூட்டங்களில் நூல் விமர்சனம், பள்ளி, கல்லூரிகளில் உரையாற்றல், சிறுகதைக்கான பயிற்சிப் பட்டறை, பழங்குடியினப் பெண்களிடையே விழிப்புணர்வு ஊட்டும் முகாம்களில் கலந்து கொள்ளல் என நீள்கிறது இவரின் பயணம். தொடர்ந்து மாணவர்கள், மகளிர் என முக்கியத்துவம் கொடுத்து உரையாற்றி வருவது இவரின் சிறப்பு.