குடும்பம், உறவுகள், நண்பர்கள், அவர்களுக்குள் ஏற்படும் சிக்கல்கள், அவற்றுக்கான தீர்வுகள் போன்றவற்றைப் பேசும் நூல் இது. அகவாழ்வில் இவர் சொல்லும் பல நிகழ்வுகள் இன்றும் பலரின் வாழ்வில் நிகழ்காலத்தில் நடந்துகொண்டு இருக்கின்றன என்பதை இந்நூலை வாசிக்கும்போது உணர முடிகிறது. இதனால், இன்றும் அவற்றை நம் வாழ்வுடன் பொருத்திப் பார்க்கலாம்; தீர்வுகளை நோக்கி நகரலாம்.
பாரதி திலகர்
இந்தியாவின் தென்கோடியில் கள்ளிகுளம் என்கிற சிற்றூரில் பிறந்து, அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் வாழ்ந்து கொண்டிருக்கும் பாரதி திலகரின் நான்காவது நூல் இது. இவர் எழுதிய பூப்பறிக்க வருகிறோம், தமிழர் பாரம்பரிய விளையாட்டுகள், சினிமாவுக்கு வாரீகளா ஆகிய நூல்களை ஹெர் ஸ்டோரிஸ் வெளியிட்டுள்ளது. தான் முன்பு பார்த்தவற்றை, இப்போது பார்த்துக் கொண்டிருப்பவற்றை, அவ்வப்போது குறிப்புகளாக எழுதி வைத்துக் கொண்டு, அவற்றைக் கட்டுரைகளாக மாற்றுபவர். அவ்வாறு உருவான கட்டுரைகள், நமது ஹெர் ஸ்டோரிஸ் தளத்தில் நூற்றுக்கும் மேல் வெளியாகியுள்ளன. இந்து தமிழ் திசை, திணை போன்ற இதழ்களிலும் தொடர்ந்து எழுதி வருகிறார்.