CART

Peyaratravarkalin Kural | பெயரற்றவர்களின் குரல் | தொகுப்பும் பதிப்பும்: நிவேதிதா லூயிஸ்

500.00
In stock : 10000 available

முதல்முறையாக  வாய்ப்பு கிடைத்து, சொல்ல முடியாத விஷயங்களைச் சொல்ல முனையும்போது, நிச்சயம் அது சிரமமான விஷயம்தான். சாமானியப் பெண்கள் இதுபோல் எழுதி அனுப்பி இருப்பதை நாம் மிக முக்கியமாகப் பார்க்க வேண்டியுள்ளது. ‘எனக்கு ஏன் இப்படி நடந்தது?’ என்று அந்த எழுத்திலேயே சோகம், தனிமை உணர்வு, எப்படி இதை வெளியே சொல்வது என்னும் ஆற்றாமை போன்றவை தெரிகின்றன. பல நேரங்களில் பேசமுடியாத இதுபோன்ற விஷயங்களில் பெண்கள் சொல்வதைக் கேட்கக்கூடிய பக்குவமோ, சூழலோ நம் சமுதாயத்தில் இல்லை. ஆகவே, இதை வாக்குமூலமாகத்தான் நாம் எடுத்துக் கொள்ளவேண்டும். 

சட்டரீதியான மாற்றம் என்பது சட்டத்தில் தானாக வரும் மாற்றம் அல்ல. அதற்குப் பின்னால் விவாதங்கள், உரையாடல்கள், வேலைகள், தகவல் திரட்டுதல், பெண்கள் ஒருவருடன் இன்னொருவர் பேசுவது போன்ற அனுபவங்கள் இருக்கின்றன. ‘பாலியல் வன்புணர்வை எப்படி நீ சகித்துக் கொள்ளமுடியும்? அது இன்னொரு பெண்ணுக்கு நடக்கிறது. உனக்கு நடக்கவில்லை. ஆனால், அது வரைக்கும் நீ சும்மா இருக்காதே. எத்தனையோ பெண்களுக்கு நடக்கிறது, நீ அமைதியாக இருக்க முடியாது’ என்கிற விழிப்புணர்வைத் தருவது (consciousness raising) அவசியம்.
– வ. கீதா



நிவேதிதா லூயிஸ்
நிவேதிதா லூயிஸ். எழுத்தாளர், சமூக, பெண்ணிய வரலாற்றாளர், ஊடகவியலாளர், இணை நிறுவனர், ஹெர் ஸ்டோரிஸ். பெண்ணிய ஆய்வாளர். வரலாறு, தொல்லியல், பண்பாடு உள்ளிட்ட தளங்களில் கடந்த 8 ஆண்டுகளாக இயங்கி வருபவர். உள்ளூர், மறைக்கப்பட்ட பெண்கள் மற்றும் சிறுபான்மைச் சமூகத்தின் வரலாற்றை முனைப்புடன் மக்களிடம் கொண்டு செல்பவர். 2024-ம் ஆண்டு பெண்ணியச் செயல்பாட்டுக்கான தேசிய லாட்லி ஊடக விருதையும், 2021-ம் ஆண்டு லாட்லி பிராந்திய விருதையும் பெற்றுள்ளார். இவரின் ‘ஆதிச்சநல்லூர் முதல் கீழடி வரை’ நூல் சென்னை மற்றும் கோழிக்கோடு பல்கலைக்கழகங்களில் பாடப் புத்தகமாக வைக்கப்பட்டுள்ளது. இந்நூலின் ஆங்கில மொழியாக்கமான ‘From Adhichanallur To Keezhadi’ 2024-ம் ஆண்டுக்கான எஸ்.ஆர்.எம். தமிழ்ப்பேராயத்தின் சிறந்த மொழிபெயர்ப்பு நூல் விருதை வென்றுள்ளது (மொழிபெயர்ப்பு - எஸ். கிருஷ்ணப்பிரியா). இவரின் ‘வடசென்னை வரலாறும் வாழ்வியலும்’ 2022-ம் ஆண்டு எஸ்.ஆர்.எம். தமிழ்ப் பேராயத்தின் புதுமைப்பித்தன் படைப்பிலக்கிய விருது வென்றுள்ளது. தமுஎகசவின் சிறந்த தொன்மைசார் நூலுக்கான கே. முத்தையா விருதையும் இந்நூல் பெற்றுள்ளது. முதல் பெண்கள், பாதை அமைத்தவர்கள், கலகப் புத்தகம், 1938 முதல் மொழிப்போரில் பெண்கள், அறியப்படாத கிறிஸ்தவம், கிறிஸ்தவத்தில் ஜாதி உள்ளிட்ட 12 நூல்களை எழுதியுள்ளார். இவரின் முதல் தொகுப்பு நூல் ‘பெயரற்றவர்களின் குரல்’