CART

Peyyena Peyya Mazhai | பெய்யெனப் பெய்யா மழை | கல்பனா

200.00
In stock : 10000 available

கேள்விகள் கேள்விகள் கேள்விகள் எனக் கேள்விகளின் கடலில் மிதக்கும் தக்கைப் பெண்களுக்கான உயிர் காக்கும் மிதவை எது? இருபதாம் நூற்றாண்டில் ஒரு மிதவை நமக்குக் கிடைத்தது. தந்தை பெரியார் ‘பெண் ஏன் அடிமையானாள்?’ என்றொரு மிதவை கொடுத்தார். இருபத்தொன்றாம் நூற்றாண்டில் கிடைத்திருக்கும் இன்னொரு மிதவையே கல்பனா அளிக்கும் ‘பெய்யெனப் பெய்யா மழை’.

- ஆண்டாள் பிரியதர்ஷினி



கல்பனா

கோவையைச் சேர்ந்த கல்பனா இப்போது மலசர் பழங்குடிகள் பற்றிய முனைவர் பட்ட ஆய்வை மேற்கொண்டு வருகிறார். அரசு சாரா தொண்டு நிறுவனம் மேற்கொண்ட பட்டியலின மற்றும் பட்டியல் பழங்குடியின ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கு எதிராகப் பின்பற்றப்பட்டு வரும் தீண்டாமைப் பாகுபாடுகள் குறித்த ஆய்வில் பங்காற்றியுள்ளார். இலக்கிய இதழ்களிலும் ஆய்விதழ்களிலும் தொடர்ந்து கட்டுரைகள் வெளியிட்டு வருகிறார். தமிழ் ஆய்வுக் களஞ்சியம் வெளியிட்டுள்ள ‘பெண்ணிய இயங்கியல்-பன்மைத்துவ உரையாடல்கள்’ எனும் ஆய்வு நூலில் ஓர் அத்தியாயம் எழுதியுள்ளார்.