ஹாய் பட்டுக் குட்டீஸ்...
உங்களுக்குக் காடுகள், மலைகள், அங்கே வசிக்கும் விலங்குகள், பறவைகள் அனைத்தையும் மிகவும் பிடிக்கும்தானே? ஓர் அடர்ந்த காட்டுக்குள்ளே அன்பான கரடியுடன் பயணம் போனால் எப்படி இருக்கும்? நம் குட்டிப் பெண் அம்லுவை கேட்டால் இதற்குப் பதில் சொல்வாள்!
அவளின் தோழி பப்லு கரடியுடன் காட்டுக்குள்ளே பயணம் போகும்போது, அம்லு யாரையெல்லாம் சந்தித்தாள் தெரியுமா? இந்தக் கதையை முழுமையாக வாசித்துப் பாருங்கள்... நீங்களே தெரிந்து கொள்ளலாம்!
வாருங்கள்... ஜாலியாகக் காட்டுக்குள்ளே ஒரு பயணம் போகலாம். இந்தச் சாகசப் பயணம் உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும்!
கிருஷ்ணப்ரியா நாராயண்
எழுத்தாளர் கிருஷ்ணப்ரியா நாராயண். தமிழ் நாவலாசிரியர் மற்றும் பதிப்பாளர். சென்னையில் வசிக்கிறார். சென்னை வானொலி நிலைய நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்தவர். இவரது பதினான்கு நாவல்கள் புத்தகமாக வெளிவந்திருக்கின்றன. ஹெர் ஸ்டோரிஸ் வலைதளத்தில் பெண்ணியக் கட்டுரைகள் எழுதி வருகிறார்.