பால் பண்புகள் (Sex Characteristics), பாலினம் (Gender) இரண்டுக்கும் உள்ள நுணுக்கமான வேறுபாடுகள், மனித சமூகத்தில் இவை எப்படிச் சமூக அமைப்பு சுரண்டல்களைக் கட்டமைக்கிறது என்பதைப் பல்வேறு ஆய்வாளர்கள் விளக்கிக் கூறியுள்ளனர். எனினும் ‘ஆண் என்பவன் இயல்பாகவே...’, ‘பெண்களின் உடல் அமைப்பிலேயே...’ போன்ற கருத்தாக்கங்களை உருவாக்கிக்கொள்கிறோம். இவற்றை விலங்குகள் உலகின் மீது தவறாக ஏற்றிவிடுகிறோம். நவீன விலங்குகள் ஆய்வு இது குறித்து என்ன கூறுகிறது என்பதைச் சுவைபட, ‘விலங்குகளும் பாலினமும்’ எனும் இந்த நூலில் நாராயணி சுப்ரமணியன் விளக்கிக் கூறியுள்ளார். பல கேள்விகளை எழுப்பி நமது ஆர்வத்தைத் தூண்டி, ஆழமான சிந்தனையை அற்புதமாக விதைத்துச் செல்கிறார். அறிவுக்கண் திறந்து வெறுப்பை அழித்து, அன்பை விதைக்கும் நூல்.
நாராயணி சுப்ரமணியன்
கும்பகோணத்தில் பிறந்தவர். முனைவர் பட்டம் பெற்றவர். இளம் விஞ்ஞானி விருது, சிறந்த அறிவியல் தமிழ் கட்டுரைக்கான அருணா ராஜகோபால் விருது ஆகிய விருதுகளைப் பெற்றுள்ளார். பள்ளி, கல்லூரிகளில் கடல்சார் உயிரினங்கள் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்திவருகிறார். பிரபல இதழ்களிலும், சிறுவர்களுக்கான அறிவியல் இதழ்களிலும் தொடர்ந்து அறிவியல் கட்டுரைகள் எழுதிவருகிறார்.
நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே (பாரதி புத்தகாலயம்), கடலும் மனிதரும் (வாசகசாலை பதிப்பகம்) ஆகிய நூல்களை எழுதியுள்ளார்.