ஆயிரங்காலத்துப் பயிராக மண்டிக் கிடக்கும் ஆணாதிக்கக் களைகளுக்கு எதிரான ஒரு பெண் மனதின் வெடிப்பாக இந்நூலை நான் பார்க்கிறேன். எத்தனையோ தீக்குச்சிகளை உரசி உரசிப் போட்டும் தீப்பற்றிக்கொள்ளாத சிவில் சமூகம் நம்முடையது. தீபலட்சுமி ஒரு பெரிய தீப்பந்தத்தை எடுத்து வந்து நிற்கிறார் இப்போது. நனைந்த பனைமரத்தூராக இருக்கும் இந்த ஆணாதிக்கச் சமூக உளவியலில் தீப்பற்றிக் கொள்ளுமா? சிரித்துக் கடக்காமல் நம் வாசக உலகம் இந்நூலைப் பரவலாக வாசித்து விவாதிக்க வேண்டும். என் சக பயணி தீபாவுக்கும் ஹெர் ஸ்டோரிஸுக்கும் வாழ்த்துகள்!
ஜெ. தீபலட்சுமி
இருபதாண்டுகளாக ஐடி துறையில் பணியாற்றி வருகிறார். பெண்ணியம், சாதி ஒழிப்பு குறித்துத் தொடர்ந்து கட்டுரைகள் எழுதி வருகிறார். ‘இப்போதும் வசந்தி பேக்கரியில் பெண்கள் காணப்படுவதில்லை’ , ‘குத்தமா சொல்லல குணமாவே சொல்றோம்' நூல்களின் ஆசிரியர், மொழிபெயர்ப்பாளர். ஜெயகாந்தனின் 11 சிறுகதைகள் மற்றும் கீதா இளங்கோவனின் ‘துப்பட்டா போடுங்க தோழி' ஆகிய நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார்.
‘ஹெர் ஸ்டோரிஸ்’ வலைத்தளத்தில் ‘ஆண்கள் நலம்’ எனும் தலைப்பில் இவர் எழுதி வாசகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்ற தொடரின் தொகுப்பே இந்நூல்.