தமிழின் மிகச்சிறந்த பெண்ணிய அறிமுக நூல்.
கீதா இளங்கோவனின் இக்கட்டுரைத் தொகுப்பு... கற்பு, பெண் உடலின் மீதான குற்ற உணர்ச்சி, குடும்பப்பெண், நகையலங்காரம், சுயபரிவு, உடற்பயிற்சி, நட்பு, பயணம், வேலை, வருமானம், வாகனம் ஓட்டுதல் எனப் பல தலைப்புகளில் கேள்விகளை எழுப்புவதோடு, தீர்வின் திசையையும் விவாதிக்கிறது. மொத்தத்தில் இந்தக் கட்டுரைகள், `துப்பட்டா போடுங்க தோழி’ என்பவர்களுக்கான பதில்; பெண்களின் சமகால சிந்தனைப் போக்கை தெளிவாக காட்டும் கண்ணாடி; ஆணாதிக்கத்தை விட்டொழிக்கும் முயற்சியில் இருப்பவர்களுக்கான கையேடு!
கீதா இளங்கோவன்
‘மாதவிடாய்’, ‘ஜாதிகள் இருக்கேடி பாப்பா’ போன்ற பெண்களின் களத்தில் ஆழ அகலத்தைவெளிக்கொணரும் ஆவணப் படங்களை இயக்கியிருக்கிறார். சமூகச் செயற்பாட்டாளர். சிறந்த பெண்ணிய சிந்தனையாளர். அரசுப் பணியிலிருந்து விருப்ப ஓய்வுபெற்ற கீதா, சமூக வலைத்தளங்களிலும் தன் காத்திரமான ஆக்கப்பூர்வமான எழுத்தால் சீர்திருத்த சிந்தனைகளை தொடர்ந்து விதைத்து வருகிறார்.