அறிவியல் என்பது பிறப்பு முதல் இறப்பு வரை கூடவே வருவது என்பதை நம்புபவர்களில் நானும் ஒருத்தி. 'அறிவதுவே' என்ற இந்த தொகுப்பில் ஒவ்வொருவரும் நிச்சயம் அறிந்து கொள்ள
வேண்டிய அறிவியல் கருத்துகள், குறிப்பாக
மருத்துவ உலகம் தொடர்பான கருத்துகளை சுவைபட பகிர்ந்திருக்கிறார் வெண்பா.
இந்த தொகுப்பைப் பற்றி குறிப்பிட வேண்டிய இன்னொரு விஷயம் வெண்பாவின்
சொற்பிரயோகம். டிஎன்ஏ என்பதற்கு தாயனை என்ற அழகான சொல்லைப் பயன்படுத்தி
இருக்கிறார். நூலின் தலைப்பான ‘அறிவதுவே' என்ற சொல்லைத் தொல்காப்பியத்தில் எடுத்தார் என்ற செய்தியும் மிக சுவாரசியமானது.
நூலை முழுவதுமாக வாசிக்கையில் எந்த இடத்திலும் எழுத்தின் ஓட்டமும் நடையும் சலிப்பைத் தரவே இல்லை, விறுவிறுப்பாகவே சென்றது.