CART

Cinemavukku Vaareegala? Tamil Cinema: 1951 to 1955 | சினிமாவுக்கு வாரீகளா? தமிழ் சினிமா: 1951 முதல் 1955 வரை | பாரதி திலகர்

375.00
In stock : 10000 available

மிகவும் பழைய திரைப்படங்களில் பெண்களின் பாத்திரங்கள் எவ்வளவு வலுவாக இருந்தன? பல படங்களில் பெயர் போடும்போது நாயகியின் பெயர்தான் முதலில் வருகிறது என்பதெல்லாம் பெரும் வியப்பு. எப்போது பெண்கள் மரத்தைச் சுற்றி ஆடும் அழகிகளாக மட்டும் மாறினார்கள் எனத் தெரிந்துகொள்ள, தான் பார்த்தவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறார் பாரதி திலகர். இது 1951 முதல் 1955 வரை வெளியான பழைய திரைப்படங்கள் குறித்த சிறு அறிமுகம்தான். இதிகாசப் படங்களின் கதை நமக்குத் தெரிந்ததுதான் என்பதால், அவை குறித்து அவர் எழுதவில்லை. சமூகக் கருத்துகள் நிறைந்திருந்த, அக்கால சமூகச் சூழல் பேசிய படங்களை மட்டுமே பார்த்து எழுதியிருக்கிறார்.


பாரதி திலகர்

தீவிர வாசிப்பாளர், பயணக் காதலர்; தொன்மை மேல் பெரும் ஆர்வம் கொண்டவர். அயல்நாட்டில் வசித்து வந்தாலும் மண்ணின் வாசம் மறவாமல் கட்டுரைகள் எழுதிவருகிறார். ஹெர் ஸ்டோரிஸ் வலைதளத்தில் இவர் எழுதிய கட்டுரைகளை, ‘பூப்பறிக்க வருகிறோம்’ என்கிற நூலாக ஹெர் ஸ்டோரிஸ் வெளியிட்டுள்ளது. இந்து தமிழ் திசை உள்ளிட்ட நாளிதழ்களில் கட்டுரைகள் எழுதி வருகிறார்.