மானுடத்தின் மகரந்தங்கள்
மகாகவி பாரதியாரின் வாழ்க்கை வரலாற்றினைப் புதிய கோணத்தில் எழுதுவதற்காக திருமதி ராஜம் கிருஷ்ணன் அவர்கள் சேகரித்த தகவல்களிலிருந்து முகிழ்த்தது இந்த நாவல்.
இந்த நாவலில் தமிழ்ச் சமுதாயத்தில் பெண்கள் நிலையையும், அவர்களின் சிந்தனை ஓட்டங்களையும், அரசியல்-பொருளாதார சூழ்நிலைகளால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளையும் மிகச் சிறப்பாகப் படம்பிடித்துக் காட்டியுள்ளார். பெண்கள் ஆண்களுக்கு அடிமையா அல்லது பெண்கள் பெண்களுக்கேதான் அடிமையா என்ற கேள்வியையும் இந்த நாவல் நம் மனத்தில் எழுப்புகிறது. ஒரு பெண் அறிவிலும், ஆற்றலிலும், ஏன் பொருளாதார நிலையிலும்கூட எவ்வளவு உயர்ந்திருந்தாலும், சமுதாயத்தில் அடிமையாகவே இருப்பதை இந்தியாவில்தான் காண முடியும்! மகாகவி பாரதியாரின் வாழ்க்கை வரலாற்றினைப் புதிய கோணத்தில் எழுதுவதற்காக திருமதி ராஜம் கிருஷ்ணன் அவர்கள் சேகரித்த தகவல்களிலிருந்து முகிழ்த்தது இந்த நாவல்.
இந்த நாவலில் தமிழ்ச் சமுதாயத்தில் பெண்கள் நிலையையும், அவர்களின் சிந்தனை ஓட்டங்களையும், அரசியல்-பொருளாதார சூழ்நிலைகளால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளையும் மிகச் சிறப்பாகப் படம்பிடித்துக் காட்டியுள்ளார். பெண்கள் ஆண்களுக்கு அடிமையா அல்லது பெண்கள் பெண்களுக்கேதான் அடிமையா என்ற கேள்வியையும் இந்த நாவல் நம் மனத்தில் எழுப்புகிறது. ஒரு பெண் அறிவிலும், ஆற்றலிலும், ஏன் பொருளாதார நிலையிலும்கூட எவ்வளவு உயர்ந்திருந்தாலும், சமுதாயத்தில் அடிமையாகவே இருப்பதை இந்தியாவில்தான் காண முடியும்!
---
சாகித்ய அகாடமி விருது வென்ற முதல் தமிழ்ப் பெண் எழுத்தாளர்... களப்பணி மூலம் புனைவுக் கதைகள் எழுதிய முன்னோடி!
எங்கோ நான்கு சுவர்களுக்குள் நாற்காலியில் அமர்ந்து எழுதுவது மட்டுமே இலக்கியமல்ல என்பதை அழுத்தமாகப் பதிவு செய்தவர் எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன். 1925-ம் ஆண்டு முசிறியில் பிறந்தார் ராஜம். பள்ளிக் கல்வியை முடிக்கும் முன்பே 15 வயதில் ராஜத்துக்கு, அந்தக் கால வழக்கப்படி திருமணம். கணவர் முத்துகிருஷ்ணன் மின்துறைப் பொறியாளர் என்பதால் தொடர்ச்சியாக தமிழ் நாடு முழுவதும் வெவ்வேறு இடங்களில் பணியாற்றும் வாய்ப்பு கிடைக்க, மனைவி ராஜமும் மகிழ்வுடன் பயணமானார். புதிய ஊர்களில் தனிமையை விரட்ட மனைவியை எழுத ஊக்குவித்தார் முத்துகிருஷ்ணன். திருமணம் முடிந்து நான்கு ஆண்டுகள் கழித்து 1944-ம் ஆண்டு ராஜம் கிருஷ்ணனின் முதல் ஆங்கிலச் சிறுகதை ‘இந்திய சிவிக் கார்ப்ஸ்’ புத்தகத்தில் பதிப்பிக்கப்பட்டது. அப்போது அவருக்கு வயது 20!
முறையான பள்ளிக்கல்வியற்ற, கல்லூரியில் காலடித்தடம்கூடப் பதிக்காத ராஜம் கிருஷ்ணன் உலகம் போற்றும் எழுத்தாளராக வளர அவரது விடாமுயற்சியும் தன்னம்பிக்கையும் கடின உழைப்பும்தான் காரணம். 200 சிறுகதைகள், மூன்று வாழ்க்கை வரலாற்று நூல்கள், 20 வானொலி நாடகங்கள், 20க்கும் மேற்பட்ட புதினங்கள் எழுதி தமிழ் மொழியின் போற்றத்தக்க எழுத்தாளர்களில் ஒருவராகத் திகழ்பவர் ராஜம்.
அவரது கதைமாந்தர்கள் அன்றாடம் நாம் காண்பவர்களாக, கடந்து செல்பவர்களாகவே இருந்தார்கள். பெரும்பாலும் பெண்களை மையப்படுத்தி, அவர்களது போராட்டங்களைச் சொல்பவையாக இருப்பவை ராஜத்தின் படைப்புகள்!