சுதந்திரமாக வாழ்ந்த மனிதகுலத்தில் குடும்ப அமைப்பு உருவான பின்பு அது பெண்களை வீட்டுக்குள் முடக்கியும், பொதுவெளியை ஆண்களுக்கு மட்டுமேயானதாகவும் ஆக்கியது. ஆணாதிக்கம்
(#Patriarchy) என்பது ஆண்கள் தலைமையில் ஆண்களுக்குச் சாதகமாக இயங்கும் சமூகத்தின் அதிகாரத்தைக் குறிப்பது.
அதே நேரம் ஆண் தலைமையிலான குடும்ப அமைப்பு ஆண்கள்மீதும் சில கட்டாயப் பொறுப்புகளையும் கோட்பாடுகளையும் ஏற்றி வைத்திருக்கிறது. அதைப் பற்றிய புரிதல் இல்லாமல் குடும்ப அமைப்புக்குள் பாலின சமத்துவமும் விடுதலையும் சாத்தியமில்லை.
சமத்துவத்திற்கு முன்னால் ஈகோ, புரிதலின்மை, பழங்கோட்பாடுகள் மலைபோல நிற்கிறன. அந்த மலையைக் கண்டு பயந்து நின்றுவிடுவதும், நகர்த்தி வைப்பதும், தகர்த்து எறிவதும் அவரவர் விருப்பம். நம்முன் இருக்கும் மலையைச் சிறிது உடைத்துப் பேசி அன்பு, சுயமரியாதை, சமத்துவம் நோக்கிய உரையாடலுக்கான தொடக்கப்புள்ளியாக இந்த நூல் இருந்தால் மகிழ்ச்சி.
-----
வித்யா. மு
தற்போது திண்டுக்கல்லில் வசிக்கிறார். வணிகவியல் பட்டதாரி. கடந்த ஒன்பது ஆண்டுகளாக பெண்கள் ஆடையகம் நடத்திவருகிறார். ZEE தமிழ் சேனலில் தொலைக்காட்சித் தொடர் எழுதியிருக்கிறார். அச்சு, இணைய இதழ்களில் கவிதைகள் மற்றும் அரசியல், சமூகம், பெண்கள், திரைப்படம் சார்ந்த கட்டுரைகள் எழுதிவருகிறார்.