பெண்கள் தனியே பயணம் செல்வது என்பதே அரிதாக இருந்த நாள்களில் இரண்டு பெண்கள் பூட்டான் சென்றனர். பயணம் என்பதே புதியன கற்றுக்கொள்ளவும் பழையன நினைவகற்றம் செய்யவும்தான். உள்ளபடியே உலகின் மகிழ்ச்சி அளவீட்டில் முதலிடம் பெற்ற நாடு எப்படி இருக்கிறது, அதன் பண்பாட்டு விழுமியங்கள், ஆண்-பெண் பாலின சமத்துவம், கலாசார ஒத்திசைவு, இயற்கையுடன் இயைந்து வாழும் தன்மை என பல தளங்களையும் உற்றுநோக்கி இந்நூல் எழுதப்பட்டுள்ளது. இது பூட்டான் பயணம் செல்வோருக்கான கையேடு மட்டுமல்ல, செல்ல வாய்ப்பு கூடாதவர்களுக்கு அந்நாட்டை அறிமுகம் செய்யும் நூலும்கூட!
நிவேதிதா லூயிஸ்
நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரத்தில் பிறந்தவர். பெண்ணிய வரலாற்று ஆய்வுப்புலத்தில் எழுதப்பட்ட ‘முதல் பெண்கள்,’ ‘பாதை அமைத்தவர்கள்,’ ‘கலகப் புத்தகம்’ போன்ற இவரது நூல்கள் பரவலான கவனம் பெற்றவை. இவரது ‘அறியப்படாத கிறிஸ்தவம்’ தமிழ் பண்பாட்டு ஆய்வுக்களத்தில் கள ஆய்வை முன்வைத்து எழுதப்பட்டது. தொல்லியல் பொருண்மைப் பண்பாடு சார்ந்த சங்க இலக்கிய இயைபை எடுத்தியம்பும் இவரது ‘ஆதிச்சநல்லூர் முதல் கீழடி வரை’ நூல் சென்னை பல்கலைக்கழகத்தின் பாடநூலாக்கப்பட்டுள்ளது. உழைக்கும் வர்க்கப் பண்பாடு, வரலாற்றுச் சின்னங்களை முன்வைத்து இவர் எழுதிய ‘வடசென்னை வரலாறும் வாழ்வியலும்’ நூல் பல விருதுகளை வென்றுள்ளது. ‘ஹெர் ஸ்டோரிஸ் உரையாடல்கள்’ நிகழ்ச்சிகளுக்காக சமூக ஊடகங்களில் பாலின உணர்திறன் பரவலாக்கத்துக்கான ‘லாட்லி’ ஊடக விருது வென்றுள்ளார். ஹெர் ஸ்டோரிஸ் ஃபவுண்டேஷனின் இணை நிறுவனர்.