வட அமெரிக்க மற்றும் இந்திய சமூகங்களை ஒப்பிட்டு, மானுடவியல் பார்வை கொண்டு அடையாளம் மற்றும் அரசியலின் விரிவான ஆய்வுகளை இப்புத்தகம் வழங்குகிறது. பல்வேறு பண்பாட்டு உரையாடல்களைக் கையாள்வதோடு, வெவ்வேறு சூழல்களில் அடையாளம் எவ்வாறு அரசியல்மயமாக்கப்படுகிறது என்றும் இப்புத்தகம் விரிவாகக் கூறுகிறது. சில அத்தியாயங்கள் மானுடவியல் கண்ணோட்டத்தில் பெண்களின் முன்னேற்றம் குறித்து கவனம் செலுத்துகின்றன. சில அத்தியாயங்கள் அரசியல் அலைநிரலுக்குள் உள்ள சித்தாந்தங்களுக்கிடையே நிகழும் சமகால அரசியல் விவாதங்கள் மற்றும் அவை குறித்த விமர்சனங்கள் பற்றிப் பேசுகின்றன. தற்போதைய அரசியல் போக்குகளுடன் பண்பாட்டுப் பகுப்பாய்வைக் கலந்து, இப்புத்தகம் சமூகக் கட்டமைப்புகள் மற்றும் அதிகார உறவுகளின் நுணுக்கமான பார்வையை வழங்குகிறது.
தீபிகா தீனதயாளன் மேகலா
தமிழகத்தைச் சேர்ந்த தீபிகா, கனடாவின் மக் ஈவன் பல்கலைக்கழகத்தில் மானுடவியல் பட்டப்படிப்பு முடித்துள்ளார். மக் ஈவன் பல்கலைக்கழக ஆய்விதழில் இவரது பட்ட ஆய்வு வெளியாகியுள்ளது. தான் கற்ற மானுடவியல் கோட்பாடுகளைத் தமிழ் நிலப்பரப்புக்கும், அமெரிக்கக் கண்டத்துக்கும் பொருத்திப் பார்த்து, ஹெர் ஸ்டோரிஸ் வலைத்தளத்தில் கட்டுரைகளை எழுதத் தொடங்கினார். வரலாறு மற்றும் தமிழ் மேல் தீவிரப் பற்று கொண்டவர்.