கவிஞராகவும் கட்டுரையாளராகவும் அறியப்படும் பிருந்தா சேதுவின் முதல் சிறுகதை நூல் இது. 2019 ஏப்ரல் முதல் 2024 நவம்பர் வரையிலான காலத்தில் குங்குமம், ஆனந்த விகடன் - தீபாவளி மலர், அவள் விகடன் போன்ற அச்சிதழ்களிலும் ஹெர்ஸ்டோரிஸ் மின்னிதழிலும் வெளியான கதைகள். இதுவரை யாரும் பேசாத பொருள்களைப் பேச வந்துள்ள தனித்த குரல் பிருந்தாவினுடையது.
பிருந்தா சேது
சே.பிருந்தா (பிருந்தா சேது), கவிஞர். எழுத்தாளர். திரைக்கதை ஆசிரியர். குழந்தைகளுக்கான கனவுலகத்தைப் படைப்பதில் எப்போதும் பெருவிருப்பம் உள்ளவர்.