எலனரைத் தமிழுக்குக் கொணர கமலி பன்னீர்செல்வம் எடுத்த முடிவு குறிப்பிடத்தக்கது. முடிவற்ற சாலைபோல் நீளும் தனிமையைக் கொண்ட இக்கதைமாதர்களின் வாழ்வு அவர்களது நம்பிக்கையை மட்டுமே ஆதாரமாகக் கொண்டுள்ளது. வாழ்க்கையை, அதன் நிகழ்வுகளை அப்படியே ஏற்றுக்கொள்கிறவர்களாக அவர்கள் தோன்றினாலும், முடிவெடுக்கவேண்டிய சூழல்களில் அவர்கள் வெளிப்படுத்தும் மன உறுதி மலையளவு பெரிது. ஏமாற்றங்களை எதிர்கொள்வதில் அவர்கள் வெளிப்படுத்தும் கண்ணியமும் தங்களது நிலைப்பாடுகளில் அவர்கள் ஊன்றி நிற்கும் இயல்பும் வியப்பளிப்பது.