ஆண் முயன்று முயன்று தோற்ற வண்ணமே இருக்கிறான். அவனது தோல்வியைப் பூசி மெழுகுவது போல சில வாக்கியங்களைக் கண்டுபிடிக்கிறான். அது ஆணின் அறியாமையைப் பறைசாற்றிக் கொள்ளவே தவிர வேறில்லை. நிஜமான அக்கறையுடன் அவர்களைப் புரிந்துகொள்ள முயற்சிப்பவர்களுக்கு விஜிலாவின் கதைகள் பெருமளவு உதவி செய்யும்.
- பாஸ்கர் சக்தி
பேசித் தீராத பெண்களின் உலகத்தைப் பற்றியே பெரும்பாலான கதைகள் பேசுகின்றன. கதைகளுக்குள்ளும் ஓர் உரையாடலை நிகழ்த்துகிறார். கதைகளை வாசித்தவுடன் மனம் கனக்க வைத்து கண்ணீர் தழும்பச் செய்வதில்லை. ஆனால், யோசிக்க வைக்கின்றன.
- உதயசங்கர்
விஜிலா தேரிராஜன் (1962) ஓய்வுபெற்ற முதுகலை தாவரவியல் பட்டதாரி ஆசிரியர். எழுத்தாளர். இவரது ‘இறுதிச்சொட்டு’ சிறுகதைத் தொகுப்பு ‘கவிதை உறவு’ இலக்கிய விருது, பாரதி தமிழ் இலக்கியப் பேரவை விருது, வியன் புக்ஸ் சமூக நீதி இலக்கிய விருது, முற்போக்கு கலை மேடை இலக்கிய விருது ஆகிய அங்கீகாரங்களைப் பெற்றது.