இந்தக் கட்டுரைகள் மனித மனங்களின் நிறங்களை, பயங்களை, நம்பிக்கைகளை, சிக்கல்களைக் கவனப்படுத்துகின்றன. பேசப்படாத விஷயங்களைப் பேசுவது என்பதுதான் இன்றைக்கு மிக அவசியமான ஒன்றாக இருக்கிறது. அப்படிப்பட்ட ஒன்றாக உளவியல் சார்ந்து எழுதப்பட்ட இந்தக் கட்டுரைகள் இந்தத் தருணத்தில் மிகுந்த முக்கியத்துவம் கொண்டிருக்கின்றன.
- கவிஞர் ராஜாத்தி சல்மா
சுய அனுபவம் தந்த தெளிவை ஓர் உரையாடல் போக்கில் அழகாக பதிய வைக்கிறது ஒவ்வொரு கட்டுரையும். தினசரி வாழ்வைக் கடக்க உதவும் எளிய வாழ்க்கைத் தத்துவங்கள் புத்தகம் முழுக்க விரவிக் கிடக்கின்றன.
இவர் எடுத்துக்கொண்ட சொற்கள் எல்லாம் நேர்மறைச் சொற்கள். ஓரிடத்தில்கூட பிரச்னை என்ற வார்த்தை இல்லை. அதற்குப் பதிலாக சவால் என்ற சொல்லாடல் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. முற்றுமுடிவில் இந்தப் புத்தகம் வெகுமக்கள் எழுத்தின் அடர்ப்பிரதி!
- அலெக்ஸ் பால் மேனன் ஐ.ஏ.எஸ்.
ஜான்சி ஷஹி
மனநல ஆலோசகரான ஜான்சி ஷஹி வாழ்வை மகிழ்ச்சியாக வாழ்வதற்கு வழிகாட்டும் வகையில், லூயிஸ் ஹே-யின் பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறார். இவர் பெங்களூரு க்றைஸ்ட் யுனிவர்சிட்டியில், மாணவர் மன நல ஆலோசகராக பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. பொறியியல் பட்டதாரியான இவர், தன்னைப் பற்றித் தெரிந்துகொள்வதிலும், மனிதர்களின் குணாதிசயங்களைப் பற்றி அறிந்துகொள்வதிலும் இருந்த ஆர்வத்தினால், கவுன்சிலிங், சைக்கோ தெரபி மற்றும் யோகாவில் முதுநிலைப் பட்டம் பயின்றவர். மனத்தின் செயல்பாட்டை அறிந்துகொள்வதிலும், மனிதர்களின் குணாதிசயங்கள் பற்றித் தெரிந்துகொள்வதிலும் இவருக்குப் பேராவல். வாழ்க்கையையும், அதன் படிநிலைகளையும் மிகவும் நேசிப்பவர். வாழ்க்கையின்மீது தீராக்காதலும் நம்பிக்கையும் கொண்டிருப்பவர்.
இது இவருடைய முதல் புத்தகம்!