CART

Penn Enum Pagadaikkaai | பெண் எனும் பகடைக்காய் | பா.ஜீவசுந்தரி

200.00
In stock : 10000 available

‘தி இந்து தமிழ் நாளிதழின் ‘பெண் இன்று’ இணைப்பிதழில் 2015 - 16ஆம் ஆண்டுகளில் தொடர்ந்து 30 வாரங்கள் ‘பெண் எனும் பகடைக்காய்’ உருட்ட வாய்ப்புக் கிடைத்தது. இந்தத் தொடரை நூல் வடிவமாகவும் ‘தி இந்து’ பப்ளிகேஷன்ஸ் வெளியிட்டது. பத்தித் தொடராக வெளிவந்த காலத்திலும், பின்னர் நூலாக வெளிவந்தபோதும் ஏகோபித்த வரவேற்பைப் பெற்ற இந்நூல் ஏறக்குறைய பத்தாண்டுகளுக்குப் பின் மீண்டும் நூல் வடிவம் பெறுகிறது. 


பா.ஜீவசுந்தரி
பா.ஜீவசுந்தரி (1963). எழுத்தாளர், ஊடகவியலாளர், பெண்ணிய ஆய்வாளர். பல்வேறு இதழ்களில் ஆசிரியப் பொறுப்புகளில் சுமார் 20 ஆண்டுகள் பணியாற்றியவர். தற்போது சுதந்திர எழுத்தாளராகப் பல்தரப்பட்ட பத்திரிகைகளில் எழுதி வருகிறார். மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் வாழ்வும் பணியும், குரலற்ற பொம்மைகள், பெண் எனும் பகடைக்காய், ரசிகை பார்வை, செல்லுலாய்ட் பெண்கள் நூல்களின் ஆசிரியர். ‘தண்ணீர் சந்தைக்கல்ல மக்களுக்கே’ நூலின் தொகுப்பாசிரியர், மூவலூர் இராமாமிர்தத்தின் ‘இஸ்லாமியரும் இந்தியர் நிலையும்’ நூலின் பதிப்பாசிரியர். ’ரசிகை பார்வை’ சிறந்த பெண்ணிய நூலுக்கான விருது பெற்றது. மூத்தப் பத்திரிகையாளர் சின்னக்குத்தூசி பெயரில் வழங்கப்படும் விருதினைத் தன் கட்டுரைக்காகப் பெற்றவர். தமுஎகசவின் மேலாண்மைப் பொன்னுச்சாமி நினைவு பெண் படைப்பாளுமை விருதையும் பெற்றுள்ளார்.