‘சட்டம் ஒரு இருட்டறை... அதில் வழக்கறிஞர் வைதேகி பாலாஜி ஒரு விளக்கு’ என்று அண்ணாவின் மொழி வழி பாராட்டி ஆசி தருவதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி. இதுபோன்ற நூல்கள் பல பல வர வேண்டும், குறிப்பாக தமிழில் வர வேண்டும். அவ்வாறு நூல்கள் வருவதன் மூலம் Ignorance of law is no excuse என்ற பழமொழியின் தாக்கம் குறைந்து எல்லா சாமானியர்களும் சட்ட ஞானம் பெற்றவர்கள் என்ற நிலை உருவாகின்ற தமிழ்நாடும், பாரத நாடும் ஏன் இந்த உலகமும் மலர வேண்டும்.
- நீதியரசர் தி.நெ. வள்ளிநாயகம்
‘சட்டம் பெண் கையில்!’ என்ற தலைப்பு உள்ளதால் பெண்கள் மட்டுமே வாங்கிப் படிக்க வேண்டிய புத்தகம் இது என்று ஒரு வட்டத்துக்குள் சுருக்காமல் அனைத்துத் தரப்பினரும் அறியவேண்டிய சட்டங்களாக இந்தப் புத்தகம் அமைந்திருக்கிறது!
- கணேசன் ராமச்சந்திரன்
வழக்கறிஞர் வைதேகி பாலாஜி
வழக்கறிஞர் குடும்பநல சட்ட ஆலோசகர் கவிஞர், எழுத்தாளர், பேச்சாளர் பேனல் அட்வகேட் பாலியல் தொல்லைகள் தடுப்பு மற்றும் பாதுகாப்பு கமிட்டியின் மெம்பர் ராணி, அவள் விகடன், குங்குமம் தோழி ஆகிய பத்திரிகைகளில் தொடர்ந்து பத்து வருடங்களுக்கும் மேலாக சட்டத் தொடர்கள் எழுதி வருகிறார்.