Have a Query ?
பாலின பேதமற்ற சமுதாயம் உருவாக வேண்டும் என்றால், அதற்கான வித்து குழந்தைகள் வளர்ப்பிலேயே தொடங்கப்பட வேண்டும். வீடு கூட்டுதல், சமையல் வேலை, கடைக்குச் செல்லுதல்... இப்படி பல்வேறு விதமான வேலைகளைச் சிறு வயதிலேயே ஆணுக்கானது பெண்ணுக்கானது என்று வரையறை செய்துவிட்டது சமூகம். குடும்பங்களும் பாடப் புத்தகங்களும் ஊடகங்களும் இதே மதிப்பீடுகளை திரும்பத் திரும்பப் போதிக்கின்றன. இந்த நச்சு வட்டம் உடைய வேண்டுமென்றால், சிறுவயதில் இருந்தே அனைத்து வேலைகளையும் செய்ய ஆண்களையும் பெண்களையும் பழக்க வேண்டும்.
மா
மா, மானசி, கண்ணம்மா, நந்தினி, ஊசா என்று பல பெயர்களில் கடந்த 40 ஆண்டுகளாக எழுதி வருபவர் ஏ.எஸ்.பத்மாவதி. வீடியோ, நாடகம், சிறுகதை, கட்டுரை என்று வெவ்வேறு வடிவங்களிலும் குழந்தைகள் மற்றும் பெண்களின் வாழ்க்கை பற்றி பதிவு செய்து வருகிறார். தமிழக அரசின் வெவ்வேறு துறைகளுக்கும், யூனிசெப், IIHS Freedom Fund போன்ற பன்னாட்டு அமைப்புகளுக்கும் வாழ்க்கைத் திறன் கல்வி, பாலின சமத்துவம் குறித்த ஆலோசகராக இருக்கிறார்.