ரமாதேவி, உங்களின் இந்தக் கதை, என்னவெல்லாம் பேசுகிறது? பெண் சுதந்திரம், வைராக்கியம், ஐநா சபையிலிருந்து அழைப்பு வந்த பிறகும், அங்கு செல்வதற்கான வழிமுறைகளின் எளிமையற்ற தன்மை, அரசியல் பகடிகள், கல்வித்தரம், சரித்திரம், இன்னும் என்னென்னவோ பேசுகிறது பட்டியிலிடமுடியாமல்... ஆனால், புத்தகம் முழுவதும் படித்துமுடிக்கும் வரையில் என் உதட்டில் தோன்றி மறையாமல் என்னுடனே பயணித்த புன்னகைதான் ஹைலைட்!
- லதா
‘கழிவறை இருக்கை’ நூலாசிரியர்
அரசுப் பள்ளியில் ஆங்கிலப் பட்டதாரி ஆசிரியராகப் பணியாற்றும் முனைவர் ரமாதேவி இரத்தினசாமி, ஐ.நா.,யுனெஸ்கோ,யூனிசெஃப், உலகவங்கி, ஐரோப்பிய யூனியன் போன்ற அமைப்புகள் நடத்திய கருத்தரங்குகளில் மகளிர் எதிர்கொள்ளும் பிரச்னைகள் குறித்து, பல்வேறு நாடுகளுக்குச் சென்று உரை நிகழ்த்தியுள்ளார். பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைப்பின் தலைவர், சார்க் மகளிர் வலையமைப்பின் திட்டக்குழு உறுப்பினர், பெல்ஜியம் உலகக் கல்வி அமைப்பின் உறுப்பினர், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மகளிர் வலையமைப்பின் தலைவர், அகில இந்திய ஆசிரியர் கூட்டமைப்பின் மகளிர் வலையமைப்பின் தேசிய துணைத்தலைவர் என பல்வேறு அமைப்புகளில் பொறுப்பு வகிக்கிறார்.