நல்லது ஈர்ப்பது போல தீயதும் பல மடங்கு நம்மை ஈர்க்கும். ஏனெனில், இந்த வாழ்க்கையில் வாழ்வை நோக்கிப் போவது போலேயே சாவை நோக்கியும் போவோம். விட்டில் விளக்கை நோக்கிப் போவது போல; ஒரு தப்படியைத் தாமதித்து, தன்னுயிர் ஈயும் மான் போல.
நாமெல்லாரும் சாவின் ஒரு காலிலும் வாழ்வின் இன்னொரு காலிலும்தான் நடந்து கொண்டிருக்கிறோம். நாம் ஏற்றாலும் ஏற்காவிட்டாலும் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் மரணமும் வாழ்வும்தான் நம்மை வழி நடத்திச் செல்கின்றன..
கூச்சம், தயக்கம், பயம் என்கிற உணர்வுகள் ஆண் பெண் இருவருக்கும் பொதுவானது; இல்லாவிடில் இத்தனை சுதந்திரம் உள்ளதாக நம்பப்படுகிற ஆண்கள் இந்நேரம் எவ்வளவோ சாதித்திருக்க முடியும்தானே?! அந்தத் தயக்கத்தை உடைத்து நம்மிடம் பேசும் நம்பகத் தன்மை வரவும், நம்மை அதைப் பற்றி எல்லாம் உரையாட அனுமதிப்பதுமே பெரும் சவாலாக இருந்தது. அது மிக முதலில் மட்டுமே. கடல் அலைகள் போலத்தான்; ஆண்கள் பெண்களுக்கும் நடுவே உள்ள அலைகளைத் தாண்டிவிட்டால், இருவருமே கடல்தான். ஒத்த உயிரினம்தான்....
பிருந்தா சேது
(சே.பிருந்தா)
கவிஞர். எழுத்தாளர். திரைக்கதை ஆசிரியர். குழந்தைகளுக்கான கனவுலகத்தைப் படைப்பதில்
எப்போதும் பெரு விருப்பம் உள்ளவர்.