இப்போது பெண்ணியம், அம்பேத்கரியம் பேசுபொருளாக இருக்கிறது; விற்கும் பொருளாக ஆகி இருக்கிறது.
பெண்கள் காபி குடிப்பதே பெரிய பேச்சாகப் பேசப்பட்ட காலமும் மிக முன்பு இருந்திருக்கிறது.
காலத்தின் தொடர் ஓட்டத்தைக் கவனித்துப் பார்த்தோமானால், இலையுதிர் காலம், இளவேனிற் காலம், கோடை காலம், மழைக்காலம், குளிர் காலம் போல மனிதர்களின் மனதின் போக்குகளும் வாழ்வும் இருக்கும். ரசனைகளும் அதே போலத்தான். ஒன்று மாற்றி ஒன்று அதேதான் வந்து கொண்டிருக்கும். இதன் நாடியைப் பிடித்து உணர முடியுமானால், அடுத்தடுத்து வெற்றிக்கான கதைகளைத் தர முடியும்.
நெஞ்சத்தைக் கிள்ளாதே, மௌனராகம், ராஜா ராணி – அந்தந்த காலத்தின் அதே கதைதான். பள்ளிக் காலத்தில் குழந்தைகள் பாடும் பாடல்கள் போல, காலங்கள் தாண்டி, ஒவ்வொருவரின் பள்ளிக் காலத்திற்கும் அதே பாடல்கள்தாம்.
விட்டலாச்சார்யா படங்கள், சாமி படங்கள், அம்மன், ஆடி வெள்ளி, ஐயப்பன் சாமி படங்கள், வரலாற்றுப் படங்கள், புராண படங்கள், பிறகு சமூகப் படங்கள், பிறகு ஒருநாளின் ஒரு நிகழ்வுப் படங்கள். சினிமாக்களின் சுழற்சி இப்படித்தான், இதுபோலத்தான்.
பிருந்தா சேது
(சே.பிருந்தா)
கவிஞர். எழுத்தாளர். திரைக்கதை ஆசிரியர். குழந்தைகளுக்கான கனவுலகத்தைப் படைப்பதில்
எப்போதும் பெரு விருப்பம் உள்ளவர்.