நான் மரணத்துக்குப் பின்னர்
மீண்டெழும் ஃபீனிக்ஸ் அல்ல.
நான்தான் கடந்தகாலம்.
நான்தான் எதிர்காலம்.
நான்தான் நிகழ்காலம்.
நான்தான் நிலையானது.
நான்தான்
நீங்கள் என்றுமே வெல்லமுடியாத போர்.
என் பெயரை மறந்துவிடாதீர்கள்.
நான்தான் அன்பு.
நான்தான் ஹிஜாப் அணிந்த பெண்.
மக்கள் என்னை எதிர்ப்பு என்று அழைக்கிறார்கள்.