‘அந்–நிய ஆண் வந்–து–விட்–டார்’ என்–றாலே ஓடிச்
சென்று கத–வுக்–குப் பின்னே ஒளிந்–து–கொள்–ளும் இந்–தி–யப் பெண்–கள்
மட்–டு–மல்ல... சர்–வ–தேச அரங்–கி–லும் பெரும் போராட்–டத்–துக்–குப் பிறகே
வழக்–க–றி–ஞ–ரா–கப் பெண்–கள் தங்–களை நிலை–நி–றுத்தி இருக்–கி–றார்–கள்.
கர்–னே–லியா சோரப்ஜி முதல் ஹிலாரி கிளிண்–டன் வரை இப்–படி உல–கப் பெண்–ம–ணி–கள்
நீதி–மன்–றத்–தில் எடுத்த களை–யை–யும் விதைத்த கலை–யை–யும் விரி–வாக
விளக்–கி–யுள்–ளார் வழக்–க–றி–ஞ–ரும் எழுத்–தா–ள–ரு–மான வைதேகி பாலாஜி.
இந்–நூலை படித்த தாக்–கத்–தில் சட்–டம் படிக்–கும்
ஆர்–வம் பலர் மன–தில் நிச்–ச–யம் உரு–வா–கும். நீதித் துறையை தவறி
தேர்ந்–தெ–டுத்து விட்–டோமோ என்று வருத்–தப்–ப–டு–ப–வர்–க–ளுக்கு, ‘இல்லை... நீங்–கள் சரி–யான
பாதை–யில்–தான் அடி–யெ–டுத்துவைத்–தி–ருக்–கி–றீர்–கள்’ என்–கிற உண்–மையை
உணர்த்–தும். பெண் வழக்–க–றி–ஞர்–களை திடப்–ப–டுத்தி மெரு–கேற்றி புடம்–போட்டு
புதிய உத்–வே–கத்–து–டன் பீடு நடை–போட்டு முன்–னே–றிச் செல்–ல–வும் உத–வும்!
வைதேகி பாலாஜி