தொலைக்காட்சியிலும் கைபேசியிலும் பலரும் மூழ்கி இருக்கும் இந்தக் காலகட்டத்தில், இந்தப் புத்தகம் குழந்தைகள் இயற்கையுடனும் சுற்றுப்புறச் சூழலுடனும் உறவாடுவதற்கு ஒரு திறவுகோலாகும். சிறார்களின் வண்ண உலகத்தை புரிந்துகொள்ள முயற்சிக்கும் பாணியில் எழுதப்பட்டுள்ளது.
பானு லட்சுமி ராமராஜ்
மதுரையில் பிறந்தவர். இளங்கலை ஆங்கிலமும் முதுகலை ஆற்றுப்படுத்துதல் உள சிகிச்சையும் (Counselling and Psychotherapy) பயின்றவர். சில வருடங்கள் சென்னைவாசியாக இருந்து மருத்துவமனையிலும் சொந்த மையத்திலும் ஆற்றுப்படுத்துதல் பயிற்சி அளித்தவர். பள்ளியிலும் பணியாற்றியவர். குழந்தைகளைச் சந்தித்து கதைசொல்லி அவர்களுடன் உரையாடுவது இவரின் பொழுதுபோக்கு. இணையரின் பணி நிமித்தமாக ஆந்திராவிலும், பின்பு எத்தியோப்பியாவிலும் வாழ்ந்தவர். குடும்பச் சூழலால் அமெரிக்காவுக்கு தனியாகவும் குடும்பத்துடனும் பயணப்பட்டு, வெவ்வேறு பண்பாடுகளில் பழகியவர். ஹெர் ஸ்டோரிஸ் தளத்தில் கட்டுரைகள் எழுதி வருகிறார். குழந்தைகளின் மனநலத்தில் இவர் கொண்ட அக்கறையின் பிரதிபலிப்பான இந்தப் புத்தகம், இவரின் முதல் முயற்சி!