CART

Rasulin Manaiviyaagia Naan...| ரசூலின் மனைவியாகிய நான்...| புதியமாதவி

180.00
In stock : 10000 available

மும்பையில் பங்குச் சந்தையில் குண்டுகள் வெடித்தன. பேருந்தில் குண்டுகள் வெடித்தன. மக்கள் கூடும் சந்தையில் குண்டுகள் வெடித்தன. மருத்துவமனையில் குண்டுகள் வெடித்தன. ஏன்.. ரயில் நிலையத்திலும் புகழ்பெற்ற தாஜ் ஹோட்டலிலும்கூட குண்டுகள் வெடித்தன. அன்றாடம் மக்கள் பயணிக்கும் ரயில்வண்டிகளில் குண்டுகள் வெடித்தன. ஏன் வெடித்தன? யார் காரணம்? யாருக்கும் தெரியாது.. ஆனால், யார் பாதிக்கப்பட்டார்கள்? பாதிக்கப்பட்டவனுக்கு மதம் இருக்கிறதா? இனம் இருக்கிறதா? மொழி இருக்கிறதா? எதுவுமில்லை. பாதிக்கப்பட்டவர்கள் எல்லோருமே மனிதர்கள்தாம். அவர்களின் வலி, வேதனை, காயங்களுக்கு அரசியல் இல்லை, மதமும் இல்லை. இந்த அனுபவங்களின் ஊடாகப் பயணிக்கிறது இந்தக் கதை. இது பாதிப்புகளைக் காட்சிகளாக மட்டுமே கண்ட மனமல்ல. நேரடியாக அனுபவித்த மனமும்கூட. ‘நீ நீயாகவும் நான் நானாகவும் இருப்போம். இருவரும் சேர்ந்தே நாம் வாழும் பூமியை நல்ல வண்ணம் ஆக்குவோம்’ என்று சொல்ல வேண்டியது மட்டுமல்ல, வாழ்ந்தும் காட்ட வேண்டிய தருணமிது. ‘ரசூலின் மனைவியாகிய நான்’ உங்கள் கதவுகளைத் தட்டுகிறாள். தண்டவாளத்தில் சக்கரங்கள் ஓடிக்கொண்டே இருக்கின்றன. மும்பை தூங்குவதில்லை. புதியமாதவியின் எழுத்துகளும்தாம்!

புதியமாதவி

புதியமாதவி (மல்லிகா) மும்பையை வாழிடமாகக் கொண்ட தமிழ்க் கவிஞர், எழுத்தாளர், சமூகச் செயற்பாட்டாளர். இவர் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் தமிழ் இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்று தங்கப் பதக்கம் வென்றவர். HSBC வங்கியில் நிர்வாகியாக 24 ஆண்டுகள் பணியாற்றியவர். மும்பையின் தமிழ் இலக்கிய முகமாகக் கருதப்படும் புதியமாதவி, மும்பை பெருநகர வாழ்வையும் மாறிவரும் பெண்களின் உலகத்தையும் சமகால சமூக அரசியல் நிகழ்வுகளையும் தன் படைப்புகளில் பதிவு செய்துள்ளார். ‘பச்சைக்குதிரை', ‘பெண்வழிபாடு', ‘மெளனத்தின் பிளிறல்', ‘ஹே ராம்' உள்ளிட்ட இருபதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். குறிப்பிடத்தக்க பெண்ணியக் கவிஞராக மதிப்பிடப்படும் இவர், மராத்திய மாநிலத் தமிழ் எழுத்தாளர் மன்ற உருவாக்கத்தில் பெரும்பங்காற்றியுள்ளார். சிற்பி இலக்கிய விருது, ஜெயந்தன் படைப்பிலக்கிய விருது, பெரியார் விருது, அறிஞர் அண்ணா விருது, சிறந்த புதினம் விருது போன்ற பல முக்கிய தேசிய மாநில விருதுகள் பெற்றவர்.