புதிய சட்டத் தகவல்கள், வரலாற்றுத் தீர்ப்புகள், சுவாரஸ்யமான வழக்கு ஆய்வுகள் மற்றும் சமீபத்திய திருத்தங்களை வழங்கும் சட்ட அறிவின் பொக்கிஷமாக இந்தத் தொகுப்பு உள்ளது. இது பொதுமக்களுக்கு மட்டுமல்ல, சட்டத்தின் நுணுக்கங்களைப் புரிந்துகொள்வதில் ஆர்வமுள்ளவர்களுக்கும் இன்றியமையாத வாசிப்பாக அமைகிறது.
வைதேகியின் பணி, சட்டத்தின் நுணுக்கங்களை, குறிப்பாக சமகாலப் பிரச்னைகளின் பின்னணியில் புரிந்துகொள்ள விரும்பும் எவருக்கும் மதிப்புமிக்க ஆதாரமாக விளங்குகிறது. குறிப்பாக ஜீவனாம்சம் சட்டங்கள் குறித்த குறிப்பிடத்தக்க தகவல் பங்களிப்பை அவர் செய்துள்ளார்.
ஒரு புதிரான வழக்கில், தன் மனைவி தாலியை கழற்றி வைத்ததால் விவாகரத்து கோரிய ஒரு மனிதனின் கதையை விவரிக்கிறார் வைதேகி. மனைவியின் சமையல், துணி துவைத்தல் ஆகியவற்றின் அடிப்படையில் விவாகரத்து கோரி மனு செய்த ஒருவரின் வழக்கையும் அவர் நகைச்சுவையாக விவரிக்கிறார்.
வைதேகியின் எழுத்துக்கள் சட்டங்களின் சிக்கல்கள் பற்றிய விரிவான புரிதலை வழங்குகின்றன. புதிரான வழக்குகள் மற்றும் முக்கிய தீர்ப்புகள் பற்றிய நுண்ணறிவுகளை அளிக்கின்றன.
ஜாவெப்லு சாய் மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி, அருணாச்சலப் பிரதேசம்
12 ஆண்டுகளாக திருப்பத்தூர், அகமதாபாத், சென்னை நீதிமன்றங்களில் வழக்கறிஞராக, குடும்ப நல ஆலோசகராகச் செயல்பட்டுவரும் வைதேகி, எழுத்தாளரும் பேச்சாளரும் கூட. கிராமப்புற பெண்களுக்கான பயிற்சி முகாம் நடத்துதல், சட்ட ஆலோசனை வழங்குதல் ஆகிய பணிகளையும் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார். சட்டம் பற்றி தமிழில் எழுதுவதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்.