கல்விப் புரட்சியின் கதை!
பெண்கள் படிக்கக்கூடாது என்று அடக்குமுறைக்கு ஆளாக்கப்பட்ட காலத்தில் பிறந்த ஒரு பெண் வரலாற்றையே மாற்றிய கதை இது.
சாவித்ரிபாய் புலே ஒரு சாதாரண கிராமத்துப் பெண். அவர் செய்த சாதனைகளோ அசாதாரணமானவை. தாழ்த்தப்பட்டவர்கள் என ஒதுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்த இந்த வீரப் பெண், இந்தியாவின் முதல் பெண் ஆசிரியராக மாறினார்... உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாட்டின் கல்வி வரலாற்றை மாற்றியமைத்தார்.
‘ஒரு குழந்தைக்கு ஒரு புத்தகத்தைக் கொடுங்கள். அது உலகத்தையே மாற்றும்’ என்று சாவித்ரிபாய் நம்பினார். இந்தச் சிறிய நூல் எளிய மொழியில் சாவித்ரிபாய் புலேயின் போராட்ட வாழ்க்கையை விவரிக்கிறது. சாவித்ரியின் துணிவுமிக்க கதை, நம் கனவுகளுக்குப் புதிய சிறகுகளை அளிக்கும்!