CART

Thevathaigal Sooniyakaarigal Pengal | தேவதைகள் சூனியக்காரிகள் பெண்கள் வரலாறு | மருதன்

300.00
In stock : 10000 available

மருதன்

இதுவரையிலான மனிதகுலத்தின் வரலாறு என்பது ஒரு வகையில் பாலினங்களுக்கு இடையிலான போராட்ட வரலாறும்கூட. ஆதியில் நிலவிய பெண் மைய சமூகம் எவ்வாறு படிப்படியாக ஆண்களின் உலகமாக மாறியது? பெண்ணின் உடல், உடைமை, உள்ளம், அடையாளம் அனைத்தும் எவ்வாறு படிப்படியாக மேலாதிக்கம் செய்யப்பட்டன? அந்த மேலாதிக்கம் எவ்வாறு சமூக அங்கீகாரத்தைத் திரட்டிக்கொண்டது? சமயம், தத்துவம், கலை, இலக்கியம், அறிவியல், அரசியல் என்று எல்லாத் தளங்களையும் முழுமுற்றாக இயக்கும் ஒரு வலுவான கோட்பாடாக ஆணாதிக்கம் வளர்ந்தது எப்படி?

இந்தக் கேள்விகளை எழுப்பாமல், இவற்றை விவாதிக்காமல் இங்கு எந்த அறிவுத்தேடலிலும் ஈடுபட முடியாது. இரண்டாம் பாலினமாகப் பெண் மாற்றப்பட்டதன் பின்னாலுள்ள அரசியலைப் பேசாமல் எந்த அறிவார்ந்த கோட்பாட்டையும் நாம் மதிப்பிட முடியாது.

வரலாறு இதுவரை சந்தித்ததில் மிக நீண்டதும் மிக வலியதுமான போராட்டம் என்பது ஆணாதிக்கத்துக்கு எதிராகப் பெண்கள் மேற்கொண்ட போராட்டம்தான். தேவதையாக, தேவியாக, பிசாசாக, சூனியக்காரியாக, அழிவு சக்தியாக, கலகக்காரியாக, சாகசக்காரியாக பல வடிவங்களை எடுத்து, ஆணாதிக்கத்துக்கு எதிராக உலகம் முழுவதிலுமுள்ள பெண்கள் முன்னெடுத்த கோட்பாட்டுச் சமரின் கதைகளும் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.