பழங்கால நூல் என்பதால் அதிலுள்ள கருத்துகளும் பழையதெனத் திருக்குறளை ஒதுக்க இயலாது. அறம் எல்லாக் காலத்துக்குமானது. வளரும் பருவத்தில் அறக் கருத்துகளை அறிவதும் புரிந்து கொள்வதும் அவசியம். அந்த வகையில் தற்காலத்துக்கு ஏற்றாற்போல இக்கதைகள் எழுதப்பட்டுள்ளன. மத, வர்க்க, பாலினச் சமத்துவம் ஆகியவை கதையின் போக்கில் நிகழும் சம்பவங்களின் வாயிலாக மறைபொருளாக, சித்திரிக்கப்பட்டுள்ளன. படிக்கச் சுவையான, சிந்திக்கத் தூண்டும் எளிமையான கதைகள் இவை.
கோகிலா
எழுத்தாளர். மெட்ராஸ் பேப்பர் இணைய வார இதழின் துணை ஆசிரியர். தொழில்முனைவர். அரசியல், சமூகம், பெண்ணியம், குழந்தைகள், தொழில்நுட்பம் சார்ந்து எழுதிக் கொண்டிருக்கிறார். ஒரு மனிதன் ஒரு நகரம், உலரா உதிரம், தரையை ஓங்கி மிதித்த பட்டாம்பூச்சி, இணையத் தொழில்நுட்பம் அறிவோம், தடை அதை உதை ஆகிய நூல்களை எழுதியுள்ளார்.