ஓர் உரையாடல்
அன்னி எர்னோவுடன் ரோஸ்-மரி லக்ராவ்
2022ஆம் ஆண்டுக்கான இலக்கிய நோபல் பரிசு வென்ற எழுத்தாளர் அன்னி எர்னோவுடனான சமூகவியலாளர் ரோஸ் - மரி லக்ராவ்வின் மனம் திறந்த தோழமையுடன் கூடிய இந்த உரையாடலில், இருவரும் தங்கள் எழுத்துகள், பெண்ணியக் கருத்துருவாக்கம் மற்றும் சமூக வரலாற்றுப் பின்னணியில், போருக்குப் பிந்தைய சூழலில் ஏற்பட்ட வர்க்க மாற்றங்கள் குறித்த தங்கள் சிந்தனைகளைப் பகிர்ந்து கொள்கிறார்கள். ஃபிரான்ஸின் சமூகவியல் பெண்ணியக் கோட்பாடுகள், கருதுகோள்கள், செயலாக்கம் ஆகியவற்றை இவ்விரு பெண்களின் அனுபவங்களின் மூலமாக நாம் புரிந்துகொள்ள முடிகிறது.
ரோஸ்-மரி லக்ராவ்
ஃபிரெஞ்சு கல்வியாளரும் சமூகவியலாளருமான ரோஸ்-மரி, ஃபிரான்ஸின் புகழ்பெற்ற EHESS சமூகவியல் நிறுவனத்தின் இயக்குநர். ஏழு நூல்களை எழுதியுள்ளார். இவரது ‘சுதாரிக்கும்போது’
(Se ressaisir) நூலுக்காக 2021ஆம் ஆண்டின் ‘சமூக எழுத்துக்கான விருது’ பெற்றுள்ளார்.
அன்னி எர்னோ
இலக்கிய நோபல் பரிசு பெற்ற முதல் ஃபிரெஞ்சு பெண் எழுத்தாளர் அன்னி எர்னோ (2022). 1974ஆம் ஆண்டு Cleaned Out என்கிற தன்வரலாற்று நூலின் மூலம் இலக்கியப் பணியைத் தொடங்கிய அன்னி, 24 நூல்களை எழுதியுள்ளார். நவீன ‘சமூகத் தன்வரலாறு' வகையில் அமைந்த இவரது நூல்கள், எழுபது ஆண்டுகால ஃபிரெஞ்சு சமூக வரலாற்றின் பிரதிபலிப்பாகத் திகழ்கின்றன.