ஒவ்வொரு குழந்தையின் குரலும் கேட்கப்பட வேண்டும் | ஒவ்வொருவரின் கதையும் முக்கியமானது!
பாதுகாப்பார்கள் என நம்பப்பட்டவர்களே வேதனைக்குக் காரணமாகும்போது, குழந்தைகள் தங்கள் குரலை உயர்த்த நாம் எப்படி உதவ முடியும்? பல தலைமுறைகளாக நம்மை அடக்கி வைத்திருக்கும் இந்த மௌனத்திலிருந்து நாம் எப்படி வெளியே வருவது?
இந்நூல்
பெற்றோர்களுக்கு எச்சரிக்கை அறிகுறிகளைக் கண்டறிய
ஆசிரியர்கள் பாதுகாப்பான சூழலை உருவாக்க
குழந்தைகள் தங்கள் உடல் உரிமையைப் புரிந்துகொள்ள
பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் குரலைக் கண்டுணர உதவும்.
குழந்தைகளைப் பாதுகாப்பதில் பெற்றோர்களின் பங்கைப் புரிந்து கொள்ளவும், குழந்தைகள் தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ள தேவையான வார்த்தைகளையும் நம்பிக்கையையும் பெறவும் இது உதவும்.
சாலை செல்வம்
பெண்ணியலாளர், கல்வியாளர், எழுத்தாளர். கல்வி, பெண்கள், குழந்தைகள் சார்ந்து தொடர்ந்து எழுதி வருபவர். தமிழகத்தில் கல்வி சார்ந்த உரையாடல்களை முன்னெடுப்பவர். பாடநூல் குழு, இளந்தளிர் இலக்கியத் திட்டம், சிறார் வாசிப்பு முயற்சிகள் ஆகியவற்றில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார். புற்றிலிருந்து உயிர்த்தல், வாழ்வியலாகும் கல்வி, அம்மாவின் சேட்டைகள் – இவரது முக்கியமான புத்தகங்கள். சிறார் வாசிப்புக்காக 75க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியும் மொழிபெயர்த்தும் உள்ளார். தமிழகப் பெண்கள் ஒருங்கிணைப்பு, 'கூடு' பெண்கள் வாசிப்பரங்கம், சாவித்திரிபாய் பூலே பெண்கள் பயணக்குழு, தமிழ்நாடு சிறார் எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம், கூழாங்கல் குழந்தைகள் நூலகம் ஆகியவற்றின் உருவாக்கம் மற்றும் செயல்பாடுகளில் இவரது பங்கு குறிப்பிடத்தக்கது. புதுச்சேரியில் ஆசிரியர் பயிற்றுநராகப் பணியாற்றி வருகிறார்.
saalaiselvam@gmail.com, 9443881701